பருவ மழை 3 மாதங்கள் முடியும் நிலையில் தமிழக அணை நிலவரம்

தென்மேற்கு  பருவ மழை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடிவுக்கு வரும் நிலையில் பருவ மழையின் இரு முக்கிய மாதங்கள் முடிந்து விடும்.  ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதமே தென்மேற்கு பருவ மழை காலங்களில் அதிக மழை நிலவக்கூடிய நேரம் ஆகும்.  செப்டம்பர் முதல் வாரத்திற்கு பிறகு வட மேற்கு இந்திய பகுதிகளில் இருந்து பருவ மழை முடிவுக்கு வர துவங்கி விடும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தை பொறுத்த வரை மழை மிகுதியாக உள்ளது என்பது ஓர் மறுக்க முடியாத உண்மை. எனினும் தென் இந்தியாவின் பல அணைகளின் நீர் ஆதாரங்கள் தென்மேற்கு பருவ மழையே நம்பி உள்ளது என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.  இந்நிலையில் காவேரி நீர் பிடிப்பு மற்றும் தமிழகத்தின் ஏனைய அணைகளின் நீர் இருப்பு எப்படி உள்ளது? இந்த ஆண்டு பாசனம் மற்றும் குடிநீருக்கு அணைகள் எந்த அளவிற்கு உதவும்?

காவேரி நீர் பிடிப்பு பகுதியில் உள்ள அணைகளில் குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணையில் மாத்திரமே கடந்த ஆண்டை விட அதிக நீர் இருப்பு அதிகமாக உள்ளது. ஏனைய அணைத்து அணைகளிலும் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.  எனினும் கடந்த சில நாட்களாக பருவ மழை பலமாக இருப்பதால் அணைகளின் நீர் வரத்து நன்கு உள்ளது ஓர் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.  இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் அணைகளில் நீர் இருக்க வேண்டுமெனில் தற்பொழுது வரும் நீர் வரத்து கிட்டதட்ட தினமும் தொடர வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஏனைய முக்கிய அணைகளை நாம் நோக்கினோம் எனில் பரவலாக நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.  இந்த பதிவில் இரு அணைகளின் நீர் இருப்பு கொடுக்கப்படவில்ல, கிருஷ்ணகிரி அணை பத்து நாட்கள் முன்பு கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டி உள்ளது, இதில் இருந்து வெளியேறும் நீர் சாத்தனூர் அணையை அடுத்து அடையும்.  ஏனைய அணைத்து முக்கிய அணைகளிலும் நீர் இருப்பு குறைந்தே காணப்படுகிறது.  மொத்ததமாக தமிழகத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு முழு கொள்ளளவில் 20% அளவிற்கே உள்ளது.

தற்பொழுது உள்ள நிலையில் விவசாயம் மற்றும் குடி நீரில் சிக்கனம் காப்பதே உசிதம்