தமிழகத்தில் பரவலாக மழை வாய்ப்பு. உட்புற பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் மீண்டும் சலனம் காரணமாக ஏற்படும் மழை பலம் பெற ஆரம்பித்துள்ளது. தென்மேற்கு பருவ காற்று தற்பொழுது சற்று தொய்வு அடைந்துள்ள நிலையில் வளிமண்டலத்தில் காற்று நிலையற்ற தன்மை உருவாக துவங்கியுள்ளது.  இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.

நேற்று இரவு பெங்களூரு மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் நல்ல  மழை கொடுத்த இடி மேகங்கள் படிப்படியாக கிழக்கு நோக்கி நகர்ந்து வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் அதிகாலை நேரம் நல்ல மழை அளித்தது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை இதன் காரணமாக இன்று காலை இருந்தது.

இன்றும் பரவலாக தமிழகத்தில் நல்ல மழை வாய்ப்பு உள்ளது.  மேல் கூறியது போல் இன்று தமிழகத்தில் தரையில் இருந்து 1.5 கி.மீ உயரம் மற்றும் 3.0 கிமீ உயரத்தில் காற்று சலனம் இருப்பதை வானிலை படிவங்கள் காட்டுகின்றன.  இதன் காரணமாக மாலை / இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.  குறிப்பாக உட்புற பகுதிகளில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்யக்கூடும்.  அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தை பொறுத்த வரை தினமும் மழை எதிர்பார்க்கலாம்.