தமிழகத்தில் வறண்ட வானிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்கும்

கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் வறண்ட வானிலை நீடித்து வருகிறது. மாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் மாத்திரமே சற்று மிதமான மழை பெய்து வருகிறது.


நேற்று மற்றும் ஞாயிறு அன்று வட சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்தது. நேற்று திருவொற்றியூர் பகுதிகளில் 9 மிமீ அளவு மழை பெய்தது. இந்த நிலை மேலும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்க கூடும். வியாழன் அன்று மத்திய வங்க கடல் பகுதியில் உருவாகும் மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாகும் நிலை உள்ளது. இந்த மேல் அடுக்கு காற்று சுழற்சி மீண்டும் மழை வாய்ப்பை வட தமிழக பகுதிகளுக்கு உருவாக்க கூடும். அது வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நீடிக்கும்.

பகல் நேர வெப்பம் 36 டிகிரி வரை எட்ட கூடும். வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் சாரல் மழை இருக்க கூடும்.