தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு, ஏனைய பகுதிகளில் பரவலாக வறண்ட வானிலை

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் இடி மேகங்கள் காரணமாக பரவலாக பெய்து வந்த மழை இந்த வாரம் தொய்வு அடைய துவங்கி உள்ளது. ஞாயிறு முதல் தினசரி மழை அளவு சராசரி அளவை விட குறைந்தே காணப்படுகிறது. நேற்றும் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை மட்டுமே பெய்தது.

வானிலை படிவங்களை நாம் நோக்கினோம் எனில் அடுத்த இரு வாரங்களுக்கு தமிழகத்தில் சலனம் காரணமாக ஏற்படும் மழை வாய்ப்பு குறைந்தே காணப்படுகிறது.  இதே நேரத்தில் தென்மேற்கு பருவ மழை மேற்கு கரையோர பகுதிகளில் பலம் பெறக்கூடும் எனவும் வானிலை படிவங்களில் கூற்று.

இன்று தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது.  காற்றின் திசை தெற்கு / தென்கிழக்கில் இருந்து இருப்பதால் தமிழகத்தில் பரவலாக இடி மேகங்கள் உருவாகும் வாய்ப்பு குறைவே.  காற்றின் திசை மீண்டும் மேற்கில் இருந்து மாறும் பொழுது இடி மேகங்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.  கேரளா கரை அருகே நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சியே இந்த காற்றின் திசை மாறுவதற்கான காரணம்.

இதே மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு ஏற்படுகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இதே போல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்