தமிழகத்தில் மாலை நேர இடி மழை மீண்டும் துவங்க வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வந்திருந்த வறண்ட வானிலை மாறுவதற்கு வாய்ப்பு உருவாகி உள்ளது.

நேற்றும் வட தமிழகத்தில் சில இடங்களில் ஓரிட நிகழ்வாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது. குறிப்பாக ரெட்ஹில்ஸ், மாதவரம் போன்ற பகுதிகளில் மாத்திரம் மூன்றாம் நாளாக மதிய / மாலை நேரங்களில் மழை பெய்தது.

Weather_map

இந்த வறண்ட வானிலை இன்று முதல் மாறக்கூடும். மேற்கு பகுதிகளில் இருந்து வரும் ஈரக்காற்று சற்று அதிகரித்து உள்ளது, மேலும் வங்க கடலில் ஓடிஷா மற்றும் ஆந்திர கரையை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி வலு பெற்று குறைந்த காற்று அழுத்தமாக உருவாக கூடும்.

இதன் காரணமாக நிலவும் மேல் அடுக்கில் காற்று நிலையற்ற தன்மை இடி மழை உருவாக வாய்ப்புகளை அதிகரித்து உள்ளது. இன்று ஓரிரு இடங்களில் சலனம் காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்ய கூடும். இது நாளை முதல் வலு பெற்று கண மழையாகவும் மேலும் பல இடங்களில் பெய்ய கூடும்.

சென்னையில் இன்று பகல் நேர வெப்ப நிலை 36-37 டிகிரி அளவு இருக்க கூடும். மாலை அல்லது முன்னிரவில் இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்ய கூடும்.