டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை மேலும் தொடர வாய்ப்பு

நேற்று இரவு திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. கல்லணை பகுதியில் அதிகபட்சமாக 52 மிமீ மழை பெய்தது.  காரைக்கால் பகுதியிலும் இன்று அதிகாலை நல்ல மழை பெய்தது.

இன்றும் டெல்டா மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக மழை தொடர வாய்ப்பு உள்ளது. மத்திய தமிழகத்தில் பல பகுதியிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மதுரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. மேற்கு தமிழகத்தில் ஈரோடு மற்றும் பழனி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மழை பெய்ய கூடும்.

Weather_map

தமிழகத்தில் அநேக இடங்களில் பகல் நேர வெப்பம் 37 டிகிரி வரை எட்ட கூடும். வட கடலோர தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு பொழுதில் மழை பெய்ய கூடும்.