தமிழ்நாட்டில் பரவலான மழை, மேலும் தொடர கூடும்

நேற்று இரவு மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. இது மேலும் ஓரிரு தினங்களுக்கு தொடர கூடும்.

Capture

தென்இந்தியாவின் உட்புற பகுதிகளில் நிலவி வரும் மேல் அடுக்கு காற்று அகழி காரணமாக நேற்று இரவு தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பரவலான மழை பெய்தது. இது இன்றும் நீடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் இலங்கை அருகே உருவாகி வரும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் கேரளத்தில் மழை மேலும் வலுக்க கூடும்.  குறிப்பாக இன்று தென் தமிழகத்தில் மதுரை / திண்டுக்கல் / சிவகங்கை மற்றும் அதனைஒட்டிய பகுதிகளிலும். மத்திய தமிழகத்தில் திருச்சி / தஞ்சாவூர் / கும்பகோணம் மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய கூடும். கேரளா ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வால்பாறை, நிலகிரி, தேனி போன்ற இடங்களில் மழை பெய்ய கூடும்.