மாற்றம் வெகு அருகில் – வடகிழக்கு பருவ மழை

வடகிழக்கு பருவ மழைக்கு தமிழகம் முழுவதும் எதிர்பர்ர்த்திருக்கும் நிலையில் நேற்று இந்திய வானிலை துறை அடுத்த 48 மணி நேரங்களில் தென்மேற்கு பருவ மழை இந்திய முழுவதும் விடை பெற்று விடும் என்று அறிவித்துள்ளது.  அதே போல் அக்டோபர் 26ஆம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

இன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இந்த மழை மேகங்கள் கடந்த சில மாதங்களாக மேற்கில் இருந்து வருவது போல் அல்லாமல் கிழக்கில் இருந்து வரக்கூடும்.  வடகிழக்கு பருவ மழை காலத்திற்கு ஓர் முன்னோடியாக இதை நாம் கொள்ளலாம்.

இன்று காலை காரைக்காலில் உள்ள இந்திய வானிலை துறை ரேடார் கடலில் டெல்டா மாவட்டங்களிற்கு கிழக்கே மழை மேகங்கள் உருவாகி வருவதை காட்டுகின்றன.  இதே போல் காற்றின் திசையும் வடகிழக்கில் இருந்து வருவதாக கணிக்கின்றன.  அடுத்த ஓரிரு மணிநேரத்தில் நாகையை ஒட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழையின் முதல் பதிவு “தமிழகத்தின் நெற்களஞ்சியம்”  டெல்டா மாவட்டத்தில் இருப்பது ஓர் நல்ல நிகழ்வே.  “மாற்றம் வெகு அருகில்”