தென்மேற்கு பருவமழை விடைபெற்றது

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையின் வருகையை எதிர்பார்த்திருக்கும் நிலையில் இன்று இந்திய வானிலை துறை தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக இந்திய துனைகண்டத்தில் இருந்து விடை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.  சராசரியாக அக்டோபர் 15ஆம் தேதியை ஒட்டி விடை பெற வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10 நாட்கள் தாமதமாக விடை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று முதல் கீழை காற்று தமிழகத்தில் வீச துவங்கியுள்ளது.  இதே போல் நேற்று தென் தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பதிவானது.  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் இன்று காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 5 செ.மீ மழை பதிவானது.  இதே போல் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பகுதியில் 4 செ.மீ அளவிற்கு மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை துவங்க ஏதுவான சூழல் ஏற்பட்டு வருகிறது.  வானிலை படிவங்களை நாம் சற்று கூர்ந்தே கவனித்தோம் எனில் அடுத்த 4 / 5 தினங்களை பொறுத்த வரை தென் தமிழகத்தில் நல்ல மழை தொடர வாய்ப்பு உள்ளது.  அக்டோபர் 30ஆம் தேதி வரையில் தென் தமிழகத்தில் இயல்பை விட சற்றே அதிகமா மழை இருக்கக்கூடும்.  இதே நேரத்தில் டெல்டா பகுதிகளிற்கு  வடக்கு உள்ள மாவட்டங்கள்   இயல்பை விட சற்றே குறைவாக மழை பெற வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு பருவ மழை வெள்ளி அன்று துவங்க நல்ல வாய்ப்பு உள்ளது.  அதற்கு பின் படிப்படியாக மழை அதிகரிக்கக்கூடும்