கடலோர தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்பு

வடகிழக்கு பருவ மழை கடந்த 27ஆம் தேதி துவங்கிய நிலையில் சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழையில் தொய்வு நிலை நீடித்து வருகிறது. நேற்று தென் தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பதிவானது.  திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மற்றும் கன்னியகுமாரி மாவட்டம் மயிலாடி பகுதிகளில் குறிப்பிடும் படியாக 24 மணி நேரத்தில் 5 செ.மீ. மழை பதிவானது.

சென்னை மக்கள் ஆவலாக வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்திருக்கும் நிலையில் அடுத்த 2 / 3 தினங்களுக்கு டெல்டா மாவட்டம் முதல் சென்னை வரையிலான கடலோர பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

 அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தை பொறுத்தவரை பரவலாக இயல்பை ஒட்டி அல்லது சராசரிக்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  மேற்கூறியது போல் இலங்கை அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை (Trough of Low) காரணமாக கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடிய ஏதுவான சூழல் ஏற்பட்டு வருகிறது.

தற்போது இருக்கும் நிலையில் அடுத்த ஓரிரு தினங்களுக்கு சென்னை மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, ஒரு சில சமயம் பலத்த மழையும் பெய்யக்கூடும்.  எனினும் வெள்ளம் ஏற்படக்கூடிய அளவிற்கு மழை இருக்க வாய்ப்பு குறைவே