தமிழகத்தில் மூன்றாவது நாளாக பரவலான மழை

நேற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது குறிப்பாக திண்டுக்கல், அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

Capture

வட உட்புற கர்நாடக பகுதியிலிருந்து தென்தமிழ் நாடு வரை நிலவி வரும் மேலடுக்கு காற்று அகழியின் காரணமாக நிலவி வரும் நிலையற்ற நிலை மற்றும் இலங்கை கடற்கரை அருகே நிலை கொண்டுள்ள மேலடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.

Weather_map_4_9

இன்றும் தென் மற்றும் மேற்கு தமிழக பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்ய கூடும். குறிப்பாக பழனி, பொள்ளாச்சி, விருதுநகர் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கண மழை பெய்ய கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மலை பகுதிகலான நீலகிரி மற்றும் வால்பாறை பகுதியிலும் மழை வாய்ப்பு உள்ளது.