தென் இந்தியாவில் பரவலான மழை தொடர வாய்ப்பு

நேற்று மேற்கு தமிழக பகுதிகளில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.  இன்று அதிகாலை மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கண மழை பெய்தது.

கடந்த சில தினங்களாக இலங்கை அருகே நிலை கொண்டிருந்த மேலடுக்கு காற்று சுழற்சி மற்றும் தென் இந்தியாவில் நிலவி வந்த மேல் நிலை காற்று தாழி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலடுக்கு காற்று சுழற்சியின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது இதன் காரணமாக தென் தமிழகத்தில் மழை அளவு குறைய கூடும்.

இன்று முதல் தென் இந்தியாவின் மேல் அடுக்கில் மத்திய வளி மண்டல காற்று குவியல் ஏற்பட கூடும். இதன் காரணமாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்று மற்றும் நாளை தென் கர்நாடக, ராயல்சீமா போன்ற பகுதிகளில் நல்ல மழை பெய்ய கூடும்.

Weather_map_4_9

தமிழகத்தில் மழை சற்றே மேல் நோக்கி நகர்ந்து மேற்கு மற்றும் வடக்கு தமிழக பகுதிகளில் அதிகரிக்க கூடும். இன்று வேலூர், திருவண்ணாமலை, கரூர் போன்ற பகுதிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலை நேரம் அவ்வப்பொழுது விட்டு விட்டு மழை பெய்ய கூடும்.