வட தமிழக பகுதிகளில் இன்று மழை வாய்ப்பு

நேற்று சென்னையில் புழல், தாம்பரம் பகுதிகளில் ஓரிட நிகழ்வாக மதியம் சுமார் 30 நிமிடங்களுக்கு மழை பெய்தது. இந்த நேரத்தின் போது புழலில் 24 மிமீ மழை பதிவு ஆகியது. நேற்றும் மாலை பொழுதில் மேற்கு தமிழகத்தின் சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பதிவு ஆகியது.

வங்க கடலில் உருவாகி வரும் தற்காலிக மேலடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக இன்றும் தென் இந்திய பகுதிகளில் காற்று பிளவு கோடு உருவாகும் வாய்ப்பு நிலவி வருகிறது.  இதன் காரணமாக தென் இந்தியாவில் பரவலாக மழை பெய்ய கூடும். குறிப்பாக டெக்கண் பீட பூமி பகுதியான தென் கர்நாடக மற்றும் அதனை ஒட்டிய ராயல்சீமா பகுதிகளில் நல்ல மழை பெய்ய கூடும்.   மேற்கு கடலோர பகுதிகலான மத்தியகேரள மற்றும் தென் கர்நாடக மாவட்டங்களில் கீழ் நிலை ஈரபத காற்று காரணமாக பரவலான மழை வாய்ப்பு உள்ளது.

Weather_map_6_9

வட தமிழக பகுதிகலான தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று மதியம் / மாலை பொழுதில் மழை பெய்ய கூடும்.  சில இடங்களில் கண மழை வாய்ப்பு உள்ளது.  மாலை மற்றும் முன்னிரவு நேரங்களில் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை வாய்ப்பு அதிகரிக்கும்.