தென் இந்தியாவில் பரவலான மழை – இன்றும் தொடர கூடும்

நேற்று தென் இந்தியாவில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக தென் கர்நாடக மற்றும் ராயல்சீமா பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.  நெல்லூர், சித்தூர், கடப்பா, கர்ணூல், பெங்களூர், பெல்லாரி மற்றும் தமிழகத்தில் வேலூர் மாவட்டங்களில் நல்ல மழை நிலவியது.

இன்றும் தென் இந்தியாவின் பல பகுதிகளில் மழை நீடிக்க கூடும். மேற்கு கடலோர பகுதிகலான மத்திய கேரளம் மற்றும் தென் கர்நாடக பகுதிகளில் கீழ் நிலை ஈரப்பத காற்று காரணமாக பரவலான மழை வாய்ப்பு உள்ளது.
இதே போன்று இன்றும் தென் இந்திய தீபகற்ப பகுதியில் காற்று குவியும் பகுதி நிலவி வருவதால் தெலுங்காணா மற்றும் வட கர்நாடக பகுதியில் பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Weather_map_7_9
தமிழகத்தில் வானம் மேக மூட்டமாக இருக்க கூடும், வட தமிழகத்தில் சில பகுதிகளில் அவ்வப்பொழுது தூறல் மழை பெய்ய கூடும். மாலை பொழுதில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும்.’