தென் மேற்கு பருவ காற்று – கேரள மற்றும் கர்நாடகாவில் தீவிரம்

கடந்த சில தினங்களாக தென் மேற்கு பருவ காற்று தென் இந்தியாவில் பரவலான மழை கொடுத்து வருகிறது.   நேற்றும் கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் மழை தீவிரமாக இருந்தது.  குடகு பகுதியில் காலை வரை 53 மிமீ மழை பெய்து இருந்தது.  கேரளாவில் உள்ள கண்ணுர்,மலபுரம், வயநாடு பகுதிகளில் பரவலான மழை பெய்தது.

தென் இந்திய தீபகற்ப மேற்கு கடலோர பகுதியில் நிலவி வரும் கீழ் நிலை காற்று தாழியால் அரபிகடல் பகுதியிலிருந்து தென் இந்தியாவை நோக்கி மழை மேகங்கள் உட்புகுதல் நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு கடலோர பகுதியில் பரவலான மழையும் ஒரு சில இடங்களில் கண மழை வாய்ப்பும் உள்ளது. மேலும் வட உட்புற கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய தெலுங்காணா பகுதிகளில் காற்று நிலை அற்ற தன்மை காரணமாக சில இடங்களில் மழை பெய்ய கூடும்.

Weather_map_8_9

தமிழகத்தில் வானம் ஓரளவு மேக மூட்டமாக இருக்க கூடும். பகல் நேர வெப்பம் 35° ஒட்டி நிலவும்.  தென் தமிழகத்தில் மதுரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும், டெல்டா பகுதியில் திருச்சி அருகே மாலை நேரங்களில் மழை வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் திருப்பதியை ஒட்டிய பகுதிகளில் மாலை அல்லது முன்னிரவு நேரங்களில் இடி மழை வாய்ப்பு உள்ளது.