சென்னையில் கண மழை – வட தமிழக பகுதிகளில் மேலும் தொடர வாய்ப்பு

நேற்று இரவு சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்தது.  சென்னை நுங்கம்பாக்கம் தானியங்கி வானிலை நிலையத்தில் 45 மீமி மழை ஒரு மணி நேரத்தில் பெய்தது. Capture

மத்திய வங்க கடலில்உருவாகி உள்ள மேலடுக்கு காற்று சுழற்சி அடுத்த 24 – 36 மணி நேரங்களில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும்.  இதன் காரணமாகவும் மேற்கு கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள கீழ் நிலை காற்று தகடு காரணமாகவும் தென் இந்தியாவில் தென் மேற்கு பருவ காற்று தீவிரம் அடைந்துள்ளது.   குறிப்பாக தெலுங்கானா, வட கர்நாடக பகுதிகளில் கண மழை பெய்து வருகிறது. இது மேலும் சில தினங்களுக்கு தொடர கூடும்.

Weather_map

 

இன்று வட தமிழக பகுதிகளில் குறிப்பாக, வட கடலோர பகுதிகளில் சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது.  தென் ஆந்திரா கரையை ஒட்டிய பகுதிகள் ஓரிரு இடங்களில் இன்று இரவு பொழுதில் கண மழை வாய்ப்பு உள்ளது.