வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு

நேற்று வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது. கும்மிடிபூண்டியில் 29 மிமீ அளவு மழையும்,எண்னூர் மற்றும் மீஞ்சுர் பகுதிகளிலும் மழை பெய்தது.

மத்திய வங்க கடலில் ஆந்திர கரை அருகே நிலவி வரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக தென் இந்தியாவில் பரவலான மழை பெய்து வருகிறது.  இந்த மேல் அடுக்கு காற்று அழுத்த சுழற்சி மேலும் ஓரிரு நாட்களில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாற கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது.  இதன் காரணமாக வரும் நாட்களில் கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்காணா பகுதிகளில் நல்ல மழை பெய்ய கூடும்.

Weather_map

வட தமிழக பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டமாக காணப்படும். மிதமான வெப்ப நிலை பல இடங்களில் நிலவ கூடும். அவ்வப்பொழுது ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்ய கூடும். மாலை பொழுதில் ஒரு சில இடங்களில் சற்று மிதமான இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்ய கூடும்.

குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகிய பிறகு தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைய கூடும்.