வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த பகுதி – ஆந்திரவில் கண மழை வாய்ப்பு

வங்க கடலில் ஆந்திர மற்றும் ஓடிஷா கரை அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இது மேலும் ஓரிரு தினங்களில் வலு பெற கூடும்.

 

இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்காணா பகுதிகளில் பரவலான மழை பெய்ய கூடும்.  மேலும் ஒரு சில இடங்களில் கண மழை வாய்ப்பு உள்ளது.

மேலும் வட கர்நாடக பகுதிகளில் சில இடங்களில் நல்ல மழை பெய்ய கூடும்.  மேற்கு கடற்கரை பகுதிகளில் கீழ் நிலை ஈரப்பத காற்று இழுப்பு காரணமாக மழை வாய்ப்பு உள்ளது.

Weather_map

தமிழகத்தில் பல இடங்களில் வறண்ட வானிலை காணப்படும். தென் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்க கூடும்.   குறிப்பாக மதுரை, திருச்சி போன்ற இடங்களில் பகல் நேர வெப்பம் 39 டிகிரி வரை எட்ட கூடும்.   வட தமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும்.