தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் – மேலும் தொடர கூடும்.

நேற்று மதுரையில் பகல் நேர வெப்பம் 40° எட்டியது. நாகபட்டினத்திலும் பகல் நேர வெப்பம் மிக அதிகமாக 38.9° தொட்டு இருந்தது. தமிழகத்தில் பல பகுதிகளில் இவ்வாறாக வெப்ப அலையின் தாக்கம் நிலவி வருகிறது.

இந்த வெப்ப அலையின் தாக்கம் இன்றும் நிலவ கூடும்.  குறிப்பாக வட கடலோர தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை சுற்றி உள்ள பகுதிகளில் பகல் நேர வெப்பம் வழக்கத்தை விட 3 டிகிரி வரை அதிகமாக இருக்க கூடும்.

Weather_map

மாலை நேரம் வட தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய கூடும்.