வங்க கடலில் மேலும் ஒரு குறைந்த காற்று தாழ்வு பகுதி

நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் மழை பெய்தது. மாதவரம் பகுதியில் 24 மிமீ மற்றும் புழல் பகுதியில் 15 மிமீ மழை அளவு பதிவு ஆகியது.

வங்க கடல் பகுதியில் மியான்மார் கரை அருகே மேலும் ஒரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இதன் காரணமாக கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.

Weather_map

இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி மேலும் வலு பெற்று வடக்கு / வட மேற்கு திசையில் நகர கூடும். இதன் காரணமாக வட ஆந்திர கரையோர பகுதிகளில் சில இடங்களில் கண மழை வாய்ப்பு உள்ளது. மேலும் கீழ் நிலை ஈரபத காற்று ஈர்ப்பு காரணமாக இன்று கேரளாவில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் வானம் மேக மூட்டமாக இருக்க கூடும். பகல் நேர வெப்ப நிலை அநேக இடங்களில் 35 டிகிரி வரை எட்ட கூடும். மாலை அல்லது முன்னிரவு நேரங்களில் வட தமிழகத்தில் சில இடங்களிலும் டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மழை வாய்ப்பு உள்ளது.