தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு.

அனைவரும் எதிர்பார்த்தவறு நேற்று மாலை சென்னைக்கு மழை தனது கருணையை காட்டி மக்கள் மனத்தை குளிர்வித்தது. தமழ் நாட்டின் பல இடங்களில் மழை பெய்து உள்ளது. திருவண்ணாமலை, மரக்காணம்,சிதம்பரம் போன்ற இடங்களில் நேற்று இரவு கண மழை பொழிந்தது.

இன்றும் வட தமிழ் நாட்டின் உட்புற பகுதிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. மேலடுக்கில் நிகழும் நிலையற்ற தன்மை காரணமாக தென் தமிழக பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர் ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கண மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டமாக காணப்படும். கிழக்கு அலைகள் காரணமாக அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் சாரல் மழை பொழிய கூடும்.

Weather_map_tamil