தமிழகத்தில் பரவலான மழை

நேற்று தமிழகத்தில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிக பட்சமாக 68 மிமீ மழை இருந்தது.

tamil__rain_number

ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர பகுதிகளிலும் பலத்த மழை பெய்து உள்ளது. பிச்சாட்டுர் மற்றும் நாகலாபுரம் ஆகிய இடங்களில் 90 மிமீக்கு அதிகமா நேற்று இரவு மழை பெய்தது.

Weather_map

இன்று பொதுவாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவ கூடும். வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி வடக்கில் நகர்ந்து உள்ளது, இதன் காரணமாக காற்றில் ஈரபதம் சற்று குறையும் நிலை உருவாகி உள்ளதால் மழை வாய்ப்பு குறைவாக உள்ளது. சில இடங்களில் சராசரி அளவை காட்டிலும் பகல் நேர வெப்பம் சற்று அதிகமாக நிலவ கூடும்.