தமிழகத்தில் வறண்ட வானிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்க கூடும்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. நேற்றும் ஓரிரு இடங்களில் மாத்திரமே சற்று மிதமான மழை பெய்தது.

இந்த நிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்க கூடும். மேல் அடுக்கில் நிலவி வரும் குறைந்த காற்று ஈரப்பதம் காரணமாக மழை வாய்ப்பு குறைந்து உள்ளது.

Weather_map

இந்த வார இறுதியில் காற்றின் திசை மீண்டும் சாதகமாக மாற கூடும். வெள்ளி முதல் மீண்டும் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்க கூடும். கடந்த சில தினங்களாக உட்புற தமிழக பகுதிகளில் நிலவி வரும் சராசரி அளவை காட்டிலும் அதிகமாக நிலவி வரும் வெப்ப நிலை இன்றும் முதல் சற்று குறைய கூடும்.

சென்னையில் ஓரளவு வானம் மேக மூட்டமாக இருக்க கூடும். பகல் நேர வெப்பம் 35° வரை எட்ட கூடும்.  கடல் காற்று இன்று சற்று முன்னதாகவே நிலவ கூடும்.  திருச்சி மற்றும் அதனை ஒட்டிய ஒரு சில இடங்களில் சராசரி அளவை காட்டிலும் வெப்பம் ஓரிரு டிகிரி அதிகமாக நிலவ கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் வெப்பம் சராசரி அளவை ஒட்டியே நிலவ கூடும்.