தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பரவலான மழை, இன்றும் தொடரும்.

நேற்று மேற்கு தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பரவலான மழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் 80 மிமீ மழை பதிவாகியது. ஈரோடு, தர்மபுரி, சேலம் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.

Weather_map_1

லட்சத்தீவு பகுதி அருகே நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று அழுத்த சுழற்சி காரணமாகவும் தென் இந்தியாவில் உருவாகி வரும் காற்று பிளவு கோடு காரணமாகவும் நேற்று முதல் தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

Weather_map

இந்த நிலை இன்றும் தொடரும். மேற்கு தமிழகத்தில் ஈரோடு, கருர், திருப்புர், ஒசூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இன்றும் மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பாண்டிச்சேரி முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதிகள் பின் மாலை பொழுதில் மழை பெய்ய கூடும். வட தமிழகத்தில் திருப்பதி ஒட்டிய பகுதிகலான வேலூர், அரக்கோணம் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் மழை வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இன்று வானம் மேக மூட்டமாக இருக்க கூடும். பகல் நேர வெப்பம் 36° வரை எட்ட கூடும். முன் இரவு பொழுதில் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது. நாளை காற்று திசை சென்னைக்கு சாதகமாக மாற கூடும் இது மழை வாய்ப்பை அதிகரிக்கும்.