வட தமிழகத்தில் பரவலான மழை இன்றும் பெய்ய வாய்ப்பு

வட தமிழகத்தில் வேலூர், தர்மபுரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று இரவு பரவலான மழை பெய்தது.  சில இடங்களில் கண மழை நள்ளிரவில் பெய்தது.

குமரிக் கடல் அருகே நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாகவும் தென் இந்தியாவில் நிலவி வரும் கீழ நிலை காற்று பிளவுகோடு காரணமாக வளி மண்டலத்தில் ஒரு நிலை அற்ற தன்மை உருவாகி உள்ளது.  இதன் காரணமாக கடந்த இரு தினங்களாக தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் பரவலான மழையும் ஒரு சில இடங்களில் கண மழையும் பெய்து வருகிறது.

Slide2

இந்த நிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதால் மழை மேலும் தொடர கூடும். தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக வேலூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் திருச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய கூடும்.  தென் தமிழகத்தில் திண்டுக்கல் மற்றும் மதுரை பகுதிகளில் மழை வாய்ப்பு உள்ளது.

Slide1

குமரி கரை அருகே உள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக இன்று கேரளாவில் பரவலான நல்ல மழை பெய்ய கூடும்.  கோழிகோடு மற்றும் திருச்சூர் பகுதிகளில் சில இடங்களில் கண மழை வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேக மூடமாகவும்  பகல் நேர வெப்பம் 35° வரை எட்ட கூடும். முன்னிரவு நேரத்தில் காற்று திசை சற்று சாதகமான நிலை உருவானால் மழை வாய்ப்பு சென்னைக்கு அதிகமாக உள்ளது.