தமிழகத்தின் உட்புற பகுதிகளில் இன்றும் மழை தொடர வாய்ப்பு

நேற்றும் தமிழகத்தில் உட்புற மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக நாமக்கல், தேனி, விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை இருந்தது.

Slide2

கடந்த சில தினங்களாக தென் இந்தியாவில் வளி மண்டலத்தில் நிலவி வந்த மேல் அடுக்கு காற்று பிளவு கோடு காரணமாக தமிழகம், தென் கர்நாடக மற்றும் ராயலசீமா பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவாகி வரும் மேல் அடுக்கு காற்று தாழி காரணமாக தென் இந்தியாவின் வளி மண்டலத்தில் காற்று குவியல் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது வளி மண்டலத்தில் ஒரு நிலையற்ற தன்மை உருவாக்க கூடும்.

Slide1

இந்த நிலையற்ற தன்மை காரணமாக தென் இந்தியாவில் உட்புற பகுதிகளான தென் கர்நாடகா, ராயலசீமா, மேற்கு தமிழக பகுதிகளில் இன்று மழை வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய வட மேற்கு மாவட்டங்களிலும் ஈரோடு, கருர், நாமக்கல் ஆகிய மேற்கு தமிழக மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது. மேலும் டெல்டா பகுதிகளில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்ய கூடும்.