மத்திய தமிழக மாவட்டங்களில் கண மழை – மேலும் தொடர வாய்ப்பு

நேற்று மத்திய தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் கண மழை பெய்தது. குறிப்பாக கருர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் அதிகபட்சமாக 117 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Slide2

வங்க கடலில் நிலவி வரும் மேல் அடுக்கு காற்று தாழி காரணமாக இன்னும் ஓரிரு நாட்களில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை அந்தமான் அருகே உருவாக கூடும்.

இந்த மேல் அடுக்கு காற்று தாழியின் காரணமாக தென் இந்தியாவில் பரவலான மழை பெய்து வருகிறது. இது மேலும் சில தினங்களுக்கு நீடிக்க கூடும். இன்று குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கடலோர வட தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்ய கூடும்.

Slide1

மேற்கு தமிழக பகுதிகளான கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கண மழை பெய்ய கூடும்.

சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்க கூடும். பகல் நேர வெப்பம் 33° அளவு நிலவும். மதியம் அல்லது மாலை நேரங்களில் மழை வாய்ப்பு உள்ளது.