வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த நிலை உருவாக வாய்ப்பு

நேற்றும் தமிழத்தில் உட்புற மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் சில இடங்களில் கண மழை பெய்தது. சென்னையில் மதியம் ஒரு சில இடங்களில் சாரல் மழை நிலவியது. பூந்தமல்லி பகுதியில் அதிக பட்சமாக 6மிமீ மழை பதிவானது.

Slide2

மத்திய வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்தமான் அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தென் இந்தியாவில் பல பகுதிகளில் பரவலான மழை வாய்ப்பு உண்டு.  மேலும் அரபிக்கடல் பகுதியில் உள்ள வேறொரு மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் உட்புற மாவட்டங்கள் மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் சில இடங்களில் கண மழை பெய்ய  கூடும்.

Slide1

தெற்கு கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா மாவட்டங்களில் பரவலான கண மழை பெய்ய கூடும். இதே போல் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை இன்றும் தொடரும். கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வட கடலோர பகுதிகளில் அவ்வபொழுது சாரல் மழை பெய்ய கூடும்.  சிதம்பரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ஒரு சில முறை பலத்த மழை பெய்ய கூடும்.