சென்னையில் ஒரு கோடைக்காலம் – மிக அருகில்.

கடந்த வாரம் எல்லோரும் மகிழும்படி மழை தனது கருணையை சென்னைக்கு காட்டியது. ஏப்ரல் மாதம் சென்னைக்கு மழை என்பது அபூர்வமான ஓர் நிகழ்வு, இந்த ஆண்டு இரு முறை மழை பெய்து மிக அபூர்வ நிகழ்வுகளும் நிகழ கூடும் என்பதை இயற்கை காட்டி உள்ளது.

இந்த நிலையில் அனைவரின் அடுத்த கேள்வி, சென்னையில் எப்பொழுது கோடைக்காலம் தொடங்கும்? வானிலை வரைபபடங்களை ஆராயும் பொழுது ஏப்ரல் 30 வரை சற்றே மீதமாக 35 டிகிரி வரை தொடரும் பகல் நேர வெப்ப நிலை, இந்த வாரம் வியாழன் அல்லது வெள்ளி போது 39 / 40 டிகிரி வரை எட்ட கூடும். கத்த்ரி வெய்யில் வருவது முன் கூட்டி பறை சாற்றுவது போல் பகல் நேர வெப்ப நிலை உயர ஆரம்பிக்கும் நேரம் வந்து விட்டது. சென்னையில் ஒரு கோடைக்காலம் வெகு விரைவில்.

நாகை / காரைக்கால் வரை தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்னும் இரண்டொரு நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய கூடும். அநேக இடங்களில் வரண்ட வானிலையே காணப்படும்.