அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

நேற்று தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக ஈரோடு, சேலம், பெரம்பலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கண மழை பெய்தது. ஏற்காட்டில் 120மிமீ மழை பெய்தது.

Slide2

இந்நிலையில் அரபிக்கடல் பகுதியில் உள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக அடுத்த 24 – 36 மணி நேரங்களில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதன் காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு கண மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

Slide1

தென் இந்திய தீபகற்பத்தின் இருபக்கமும் நிலவி வரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் தென் கர்நாடக பகுதியில் வளி மண்டல காற்று நிலையற்ற நிலை உருவாகி உள்ளது இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் உட்புற மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை  மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வடக்கு கடலோர பகுதிகளில் மரக்காணம் முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதிகளில் ஒரு சில இடங்களில் இரவு பொழுதில் மழை பெய்ய கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டமாக இருக்க கூடும், பகல் நேர வெப்பம் 33° வரை எட்ட கூடும். மாலை நேரம் ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.  இது மேற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சற்று பலத்த மழையாக இருக்க கூடும்.