டெல்டா பகுதிகளில் பரவலான மழை

நேற்று டெல்டா மாவட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்தது. தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுகோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையில் தெற்கு புறநகர் பகுதிகளில் சில இடங்களில் அதிகாலை மழை பெய்தது, பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

அரபிக்கடல் பகுதியில் அடுத்த 12 – 24 மணி நேரத்திற்குள் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.  இதன் காரணமாக கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும். குறிப்பாக வடக்கு கேரளாவில் வயநாடு பகுதி மற்றும் கர்நாடகாவில் சிக்கமகளுறு பகுதிகளிலும் கண மழை பெய்ய கூடும்.

Slide1

மேலும் வங்க கடலில் ஓடிஸா ஒட்டிய பகுதியில் நிலவி வரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக மற்றொரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஓரிரு நாட்களில் உருவாக கூடும்.

Slide2

தமிழ்நாட்டில் வானம் ஓரளவு மேக மூட்டமாக இருக்க கூடும். பகல் நேர வெப்பம் 35° வரை எட்ட கூடும். கடலோர பகுதிகளில் உட்புற பகுதிகளை காட்டிலும் சற்று வெப்பம் அதிகமாக இருக்க கூடும். வடக்கு தமிழக மாவட்டங்களில் வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் மாலை நேரம் மழை பெய்ய கூடும். நள்ளிரவு பொழுது வடக்கு கடலோர பகுதிகளில் குறிப்பாக சென்னை மற்றும் சிதம்பரத்திற்கு இடைப்பட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்ய கூடும்.