கன்னியாகுமரி மாவட்டத்தில் கண மழை இன்றும் தொடர வாய்ப்பு

நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது, நாகர்கோயிலில் காலை 5:30 மணி வரை 72 மிமீ மழையும் கீழ் கோதையாரில் 141 மிமீ மழை அளவும் பெய்து உள்ளது.

அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள நன்கமைந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி (Well Marked Low) காரணமாக கேரளா மற்றும் தென் தமிழக பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கேரளாவில் தமிழகத்தை ஒட்டிய பகுதிகளான திருவனந்தபுரத்தில் 49 மிமீ மழையும் தென்மலையில் 65 மிமீ மழை அளவும் பெய்து உள்ளது.

அரபிக்கடல் பகுதியில் வடக்கு கர்நாடக / தென் மகாராஷ்டிரா கரை அருகே நிலை கொண்டுள்ள நன்கமைந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி  அடுத்த 24 மணி நேரத்திற்குள் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) வலு பெற கூடும். இதன் காரணமாக மேற்கு கடலோர பகுதியிலும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலான மழை பெய்ய கூடும். ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பிற பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

Weather_map_1

சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டமாக இருக்க கூடும், காலை 10 மணி வரை சற்று மிதமான வெப்ப நிலை நிலவும்.  பகல் நேர அதிக பட்ச வெப்பம் 34° வரை எட்ட கூடும். மாலை / இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.