வட தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு

நேற்று இரவு சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய வானிலை துறை தானியங்கி வானிலை மையத்தில் 18  மிமீ  அளவு மழை பதிவாகியது.

Capture

அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் மழை நீடிக்கும். குறிப்பாக வடக்கு கேரளா மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும் கர்நாடகாவில் பெல்லாரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் ராயலசீமா பகுதியில் அனந்தபூர் மற்றும் கர்னூல்  ஆகிய இடங்களில் மழை பெய்ய கூடும்.

10_10_tamil_1

தமிழகத்தில் வானம் ஓரளவு மேக மூட்டமாக இருக்க கூடும். வட தமிழக பகுதிகளில் பகல் நேர வெப்பம் அதிகபட்சமாக 34° வரை எட்ட கூடும்.  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பகல் நேர வெப்பம் 35° தாண்ட கூடும்.  மாலை பொழுதில் வட உட்புற மாவட்டங்களான திருவண்ணாமலை, தர்மபுரி,கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய கூடும்.  முன்னிரவு பொழுதில் வடக்கு கடலோர பகுதிகளிலும் டெல்டா மாவட்ட பகுதிகளிலும் மழை வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக மரக்காணம் முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதியிலும் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும்.

சென்னையில் காலை நேரம் மிதமான வெப்ப நிலையுடன் இருக்கும். பகல் நேர வெப்பம் 33°  வரை எட்ட கூடும். இரவு பொழுதில் சில இடங்களில் மேற்கிலிருந்து வரும் இடி மேகங்கள் காரணமாக மழை பெய்ய கூடும்.