வட தமிழகத்தில் வெப்ப அலை வாய்ப்பு.

இன்னும் சில தினங்களில் கத்திரி வெய்யில் காலம் தொடங்க உள்ளது. அநேக இடங்களில் கோடை காலம் தொடங்கி பகல் நேர வெப்ப நிலை உயர ஆரம்பித்துள்ளது.

அடுத்த சில தினங்களுக்கு வட தமிழகத்தில் மதியம் வரை மேற்கத்திய தரை காற்று காரணமாக பகல் நேர வேப்ப நிலை 38⁰ – 40⁰ வரை உயர கூடும். வேலூர், கரூர், அரக்கோணம், திருச்சி மற்றும் சேலம் போன்ற பகுதிகளில் வெய்யிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்க கூடும். இந்த நிலை 5- 7 நாட்களுக்கு தொடர கூடும்.

 

Weather_map