இன்று உட்புற தமிழகத்தில் மழை வாய்ப்பு

நேற்று வட தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பரவலான மழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம் இந்திய வானிலை துறை தானியங்கி மையத்தில் காலை வரை 13மிமீ மழை பெய்தது.  அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் களவையில் 58 மிமீ மழை பதிவாகியது.

அரபிக்கடல் பகுதியில் மும்பைக்கு தென் மேற்கே நிலை கொண்டுள்ள நன்கமைந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலு பெற்று புயலாக மாற கூடும் என எதிர் பார்க்க படுகிறது. இது வலு பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர கூடும்.

இந்த நன்கமைந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் சற்றே மேற்காக நகர்வதால் தென் இந்திய தீபகற்ப பகுதிகில் காற்றின் திசை மாற கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது.  இது வரை கீழ நிலை காற்று தென் மேற்கு திசையிலிருந்து வீசி கொண்டிருந்தது இன்று முதல் வடக்கு / வடகிழக்கிலிருந்து வீச கூடும் என எதிர்பார்க்கலாம்.

Slide1

இதன் காரணமாக மேல் அடுக்கில் கீழை மற்றும் மேலை காற்று சந்திக்கும் நிலை தென் இந்திய தீபகற்ப உடுபுற பகுதிகளில் உருவாகி உள்ளது. இது வளி மண்டலத்தில் காற்று நிலையற்ற தன்மை உருவாக்க கூடும்.  இந்த நிலையற்ற தன்மை உட்புற பகுதிகளில் மழைக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.  குறிப்பாக கர்நாடகாவில் தும்கூர், பெங்களூர், ஹுப்ளி, பெல்லாரி ஆகிய பகுதிகளிலும் ஆந்திராவில் அனந்தபூர், கர்னூல், சித்தூர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கண மழை எதிர்பார்க்கலாம்.

இன்று உட்புற தமிழகத்தில் மழை வாய்ப்பு 

தமிழகத்தில் உட்புற மாவட்டங்களுக்கு இன்று நல்ல மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. வட தமிழக பகுதிகளில் வானம் மேக மூட்டமாக இருக்க கூடும்.  வட மேற்கு மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம் ஆகிய மாவட்டங்களில் மாலை நேரம் மழை பெய்ய கூடும்.  முன்னிரவு நேரத்தில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கருர் திண்டுக்கல் புதுகோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Slide2

சென்னையில் காலை பொழுதில் வானம் மேகமூட்டமகவும் வானிலை மிக இதமாகவும் இருக்கும்.  காலை 10 மணிக்கு மேல் சற்று வெப்பம் அதிகரிக்க கூடும்.   பகல் நேர வெப்பம் 34°வரை எட்ட கூடும்.  சென்னையை பொறுத்த வரை காற்றின் திசை மாறுவதால் இன்று முதல் மழைக்கான வைப்பு குறைய கூடும்.  வடகிழக்கு பருவ மழை காலம் துவுங்கும் வரை இந்த நிலை நீடிக்கும்.