தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

நேற்று தமிழத்தின் உட்புற பகுதிகளில் பரவலான மழை பெய்தது.  குறிப்பாக திருச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

Weather_map_1

நேற்று முதல் வட கிழக்கு பருவ மழை வருவதற்கான அறிகுறியாக காற்றின் திசை மாற துவங்கி உள்ளது.  இது வரை இருந்த மேலை காற்று தற்பொழுது வளி மண்டலத்தின் கீழ நிலையில் கீழை காற்றாக மாறி உள்ளது.  இதன் காரணமாக தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் வளி மண்டல காற்று பிளவு கோடு ஏற்பட்டு உள்ளது.

Weather_map

இந்த காற்று பிளவு கோடு காரணமாக ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை மழைக்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறது.  இன்று மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும்.

தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு 

தென் தமிழகத்தில் இன்று பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக மதுரை, விருதுநகர், திருநெல்வேலி.கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கண மழை வாய்ப்பு உள்ளது.  திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்ய கூடும்.

டெல்டா மாவட்டங்களான திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.   வட தமிழக கடலோர பகுதிகளில் சிதம்பரம் முதல் வேதாரண்யம் வரை அதிகாலை மழை பெய்ய கூடும்.  வட தமிழகத்தில் திருவண்ணாமலை, தர்மபுரி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மதியம் மழை பெய்ய கூடும்.