வடகிழக்கு பருவ மழை தொடக்கம் தாமதம் அடைய கூடும்

அடுத்த சில நாட்களுக்கு தமிழ் நாட்டில் பலரது எண்ணமும் வடகிழக்கு பருவ மழை எப்பொழுது தொடங்க கூடும் என்றே இருக்கும்.  வடகிழக்கு பருவமழையின் சராசரி துவக்கம் இந்திய  வானிலை துறையின் கணிப்புபடி அக்டோபர்  20 ஆகும்.  இத்துவக்கம் சராசரி தினத்திற்கு 7 நாட்கள் முன்பு வரை அல்லது 7 நாட்கள் பின்பு வரை நடக்க கூடும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை எப்பொழுது தொடங்க கூடும்.?

தென்மேற்கு பருவ மழை 10 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நேற்று மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து விலகி உள்ளது.  மேற்கில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தென் மேற்கு பருவ மழை விலகிவிட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை எப்பொழுது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கூறியவாறு அக்டோபர் 20  என்பதே இந்திய வானிலை துறையின் வடகிழக்கு பருவ மழை துவக்க தினம், கடந்த ஆண்டு அக்டோபர் 18 அன்று வடகிழக்கு பருவ மழை துவங்கியது.  சென்னையில் இரண்டு தினங்களில் 200 மிமீக்கும் அதிக மழை பெய்தது.  தமிழகத்தில் பரவலான மழையும் அக்டோபர் 17 முதல் பெய்ய ஆரம்பித்தது.

ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை சற்று தாமதமாக துவங்க கூடும்.   இலங்கை மற்றும் தென் தமிழக பகுதிகளில் அக்டோபர் 18 முதல் ஓரிரு இடங்களில் கீழை காற்றின் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ள போதிலும் பரவலான மழை அக்டோபர் இறுதி வாரம் துவங்க கூடும்.  இதற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகி வரும் “கொப்பு” கடும்புயலே காரணம்.

தற்பொழுது மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உருவாகி உள்ள “கொப்பு” புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் வீரியம் அதிகரிக்க துவங்கும் நேரத்தில் வங்காள விரிகுடாவில் தற்பொழுது நிலவி வரும் கீழை காற்று மேலை காற்றாக மாற வாய்ப்பு உருவாகி வருகிறது.  இதன் காரணமாக தென் இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் மீண்டும் வடக்கிலிருந்து நில காற்று வீச கூடும்.  இந்த உலர்ந்த காற்று மழை மேகங்களை கொண்டு வரும் சாத்தியம் சற்று குறைவே என்பதால் வடகிழக்கு பருவ மழையின் துவக்கம்

Capture

இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நிகழ கூடும்.  அடுத்த வாரம் தென் சீன கடற்பகுதியை அடையும் பொழுது கோப்பு கடும் புயல் வலுவிழக்க கூடும், அப்பொழுது வங்காள விரிகுடாவில் மீண்டும் கீழை காற்று மாறி வட கிழக்கு பருவ மழை துவங்க அதிக வாய்ப்பு உள்ளது.