தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக இந்திய முழுவதும் பொதுவாக வறண்ட வானிலையே நிலவி  வருகிறது. தென்மேற்கு பருவமழை கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே விலகாமல் உள்ளது.  அடுத்த ஓரிரு நாட்களில் கிழக்கு இந்தியாவிலிருந்தும் தென் மேற்கு பருவ மழை விலக வாய்ப்பு உள்ளது.

இன்றும் தென் இந்தியாவில் பரவலாக வறண்ட வானிலையே நிலவ கூடும்.   வட கடலோர ஆந்திராவில் ஒரு சில இடங்களில் கீழை காற்று  காரணமாக மழை பெய்ய கூடும்.   இதே போல் காற்று குவிப்பு காரணமாக தென் கர்நாடக மற்றும் கேரளாவில் சில இடங்களில் மழை பெய்ய கூடும்.

Weather_map_17_10

கீழை காற்று காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை வாய்ப்பு உள்ளது.  வேதாரண்யம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர பகுதிகளில் சில இடங்களில் அவ்வபொழுது மழை பெய்ய கூடும்.  குறிப்பாக தூத்துக்குடி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்க கூடும்.  சமவெளி இடங்களில் பகல் நேர வெப்பம் 33° வரை எட்ட கூடும்.