தமிழக மழை நிலவரம் – கடலோர பகுதிகளில் மழை வாய்ப்பு


நேற்று [17.10.2015 / 12Z] மாலை நேரத்தில் 5 டிகிரி வட அட்ச ரேகைக்கும் கீழ், கீழைகாற்று ஸ்ரீலங்காவின் தென்மேற்கு பகுதியில் இடி மேகத்தை உருவாகியது. இம்மேக கூட்டம் கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து தென்கோடி குமரிக்கு மழை தந்து உள்ளது . கன்னியாகுமரியில் 36.8 எம் எம், நாகர்கோயிலில் 68.0 எம்.எம். மழை தந்து உள்ளது.  வட கிழக்கு பருவகாற்று காலத்தில் வேதாரணியம் முதல் நெல்லூர் வரை உள்ள கடல்கரை பகுதி நல்ல மழை பெறும்.  அந்த வகையில் 10 டிகிரி வட அட்ச ரேகைக்கு கீழ்ப் பகுதியில்,    மன்னார் வளைகுடாவில்  கடலில் மேக கூட்டம் உருவாகுவதை காண முடிகிறது.  இது இன்று குமரி முதல் வேதாரணியம் வரை உள்ள கடற்பகுதிக்கு மழை தரும். ​​

171015 12Z