தமிழர் நில வகைப்பாடும் மழையும்பழந்தமிழர் நிலங்களை நான்கு வகையாக பிரித்தனர். மலையும் மலை சார்ந்தும் உள்ளவை “குறிஞ்சி”என்றும் காடும் காடு சார்ந்தும் உள்ளவை  “முல்லை  ” என்றும் வயலும் வயல் சார்ந்தும் உள்ளவை”மருதம்” என்றும் கடலும் கடல் சார்ந்தும் உள்ளவை  “நெய்தல்”:என்றும் பகுத்தனர். எனவே தான் நானிலம்என்றனர். குறிஞ்சியும் மருதமும் மழை இல்லாமல் திரிந்து “பாலை” என்று மறுவின என்று மொழிவர்.கோப்பென் என்பார் மழையையும் வெப்பத்தையும் இணைத்து நிலங்களின் காலநிலையைவகைபடுத்துவார். இது கொப்பெனின் காலநிலை வகைப்பாடு எனப்படும்.பசுமை மாறா காட்டுபகுதியில்மழையும் [சூடும்] மிகுந்து காணப்பெறும்.நமது முன்னோர்கள் நிலங்களை அந்த வகை ஒட்டியே பிரித்துஇருந்தனர் என்பது எண்ணி வியக்கத்தக்கது.

cimss191015 15Z

குமரியை ஒட்டிய கடல் பகுதியில் ஏற்பட்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர மாவட்டங்கள் அல்லாது உட்புற மேலை மாவட்டங்களிலும் மழை தந்து உள்ளது.திருவண்ணாமலை     செங்கம், ஈரோடு பெருந்துறை, தேனியில் போடி, போன்ற இடங்களில் மழை.

mas191015 16LT

பிலிப்பைன்ஸ் நாட்டில் கரையை கடந்த பசிபிக் புயல் காரணமாக வங்க கடலில் காற்றின் திசை சற்று மாற்றம் அடைந்துள்ளது, இதன் காரணமாக வடகிழக்கு பருவ மழை சற்று தாமதம் அடைய கூடும் என எதிர்பார்க்கலாம்.