மேடன் ஜுல்லியன் ஒத்தசைவும் மழையும்

மேடன் ஜுல்லியன் ஒத்தசைவு என்பது இந்திய பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஊடாக கிழக்கு நோக்கி பயணிக்கும் ஓர் ஒத்தசைவு ஆகும். அதாவது இப்புவியனது 71% கடலாலும் 29% நிலத்தாலும்  சூழப்பட்டது.  இப்புவிக்கு கதிரவனே ஆற்றல் கொடுக்கும் மூலம் ஆகும்.

பொதுவாக சொல்வது என்றால் சூரியனின் ஆற்றல் கடலிலும் நிலத்திலும் ஏற்படுத்தும் வெப்ப மாறுபாடே பூமியை போர்வைபோல் சுற்றி இருக்கும் வளி மண்டலத்தில் வானிலையை ஏற்படுத்துகிறது. இந்த ஆற்றல் வெளிப்பாடு கடல்மீது இருக்கும் வளி மணடலத்தின் மேல் ஊர்ந்து ஒரு குறிபிட்ட வானிலையை உண்டாக்குகிறது.

mjo 231015

இது ஒரே நாளில் உண்டாகும் கடற்காற்றாகட்டும் சில தினங்கள் நீடித்து இருக்கும் புயல் போன்ற வானிலை ஆகட்டும் அன்றி 20-30 நாட்களுக்கு ஒரு முறை புவியைச் சுற்றி கிழக்கு முகமாக பயணிக்கும்  மேடன் ஜுல்லியன் ஒத்தசைவு ஆகட்டும் அன்றி பருவக்காற்று ஆகட்டும் எல்லாமே கடல் மீதூறும் வளிமண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகும். அதிலும் இந்திய துணை கண்டத்தை  பொறுத்த வரையில் இந்திய  பெருங்கடல் அதை ஒட்டி அமைந்த மேலை பசிபிக் பெருங்கடல் இவற்றின் வான் மீது ஏற்படும் தாக்கம் இந்தியாவை பாதிக்கும்.  மேடன் ஜுல்லியன் ஒத்தசைவு என்பது இவ்வாறான தாக்கமே.

தென்மேற்கு பருவகாற்று காலங்களிலும் வடகிழக்கு பருவகாற்று காலங்களிலும் இந்த ஒத்தசைவு மழையை பொய்த்து போக செய்தும் மறுவமயம் பெரும் மழையாய் பொழிவித்து செல்லும். மேடன் ஜுல்லியன் ஒத்தசைவு உள்ளது என்பதை கண்டு ஆய்வது கடினமான செயல். அப்படியான ஒத்தசைவு இப்போது ஏற்படவில்லை என்பதே தெளிவு.

இன்று காலை நிலவரப்படி [21.10.2015/0430 இந்திய திட்ட நேரம் ] தமிழகத்தில் பெரிதாய் மழை இல்லை. கமுதிலும் ஏற்காட்டிலும் மழை. “கழுவி விட்ட வானம் “ என்று கிராமப்புறங்களில் கூறுவதை போல்  நீல வானமாய் அவ்வபோது மேகம் வந்து செல்வதாய் அமையும்