வட தமிழகத்தில் மிதமான வெப்ப அலை, மேலும் ஓரிரு நாட்களுக்கு தொடர கூடும்.

நேற்றும் இன்றும் வட தமிழகத்தில் சில இடங்களில் சற்றே மிதமான வெப்ப அலை வீசியது. மே 1 அன்று அதிக பட்சமாக திருத்தணியில் 40 டிகிரி வெப்பம் வீசியது.

நேற்றும் இன்றும் வேலூர் பகல் நேரத்தில் 39 டிகிரி தொட்டு வெயிலின் தாக்கம் தெரிந்தது. சென்னை விமான நிலையம் இரு தினங்களிலும் 37 டிகிரி வரை எட்டியது.

இந்நிலை இன்னும் ஓரிரு தினங்கள் தொடர கூடும். உட்புற பகுதிகளில் சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய கூடும்.