தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழ் நாட்டின் அனேக இடங்களில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. நேற்று குன்னூரில் 31 மிமீ மழை பெய்தது. ஈரோடு மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது ஏனைய இடங்களில் பொதுவாக வறண்ட வானிலையே இருந்தது.

இந்த வறண்ட வானிலை நீடிப்பதால் எல்லோரது மனதிலும் இருக்கும் கேள்வி வட கிழக்கு பருவ மழை எப்பொழுது தொடங்கும் என்பதே. சில கணிதம் சார்ந்த வானிலை கணிப்புகள் அக்டோபர் 27 முதல் கீழை காற்றுடன் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்பினை கணிக்கின்றன. இதே நேரத்தில் வட இந்திய பெருங்கடல் பகுதியில் வெப்ப மண்டல கலக்கம் உருவாக வாய்ப்பு உள்ளது என எதிர் பார்க்கப்படுகிறது

Weather_map

அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும். இன்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய கூடும்.  குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் மழை வாய்ப்பு உள்ளது