கீழை காற்றும் வட கிழக்கு பருவ காற்றும் ஒன்றா? – விரிவாக்கம்

கீழை அலை [கிழக்கத்திய அலைவு] என்பது மற்றும் ஒரு வானிலை நிகழ்வு. இது மேற்கு நோக்கி நகரும் ஓர் அலைவு. இவ்வகை அலை தென் ஆப்ரிக்காவின் மேற்கு கரையில் அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கி மேற்கு நோக்கி பயணிக்கும்.

இவ்வகை அலைகளில் அலை முகடும் அலை பள்ளமும் இருக்கும். அலையின் முகடு பகுதியில் இடிமேகம் உண்டாகி மழை தரும். மாறாக அலை பள்ளம் பகுதியில் தெளிந்த வானிலை நிலவும். கீழை அலை மேற்கு நோக்கி சில ஆயிரம் கிலோமீட்டர் தூரம் செல்லும். பொதுவாக மே மாதம் தொடங்கி நவம்பர் வரையில் நீடிக்கும்.

வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் (தமிழகத்தில்) கீழை அலை மழையையும் புயலையும்  உண்டாக்க வல்லது.  இது வடகிழக்கு பருவமழை காலத்திலும்  ஏற்படுவதால்  வட கிழக்கு பருவக்காற்றோடு  இணைந்தது  போல் தோற்றம் அளிக்கும்.(தென் மேற்கு பருவக்காற்று காலத்திலும் ஏற்படும் இதை, அட்லாண்டிக் கடற்பகுதியில் ஆப்ரிக்காவின் கீழை அலை என்றும்  கூறுவர். இது வடக்கு தெற்காக தாழ்வு மண்டலத்தை உருவாக்கும்.)

ஆனாலும் இவ்வகை நிகழ்வு வேறு வட கிழக்கு பருவக்காற்று வேறு. வட கிழக்கு பருவக்காற்று காலத்தில் பருவக்காற்று கிழக்கு மேற்காக தாழ்வு மண்டலத்தை உருவாக்கும்.

quik_scat_tracking_easerly wave (1)