சென்னையில் நேற்று பரவலான மழை

சென்னையையும் அதைச் சுற்றியும் நேற்று [23.10.2015] மழை பெய்தது. பல்வேறு காரணங்கள் மழைக்காக கூறப்பட்டன. எனினும் ஏறக்குறைய 14 மணி நேரம் மட்டும் மழை வந்து போனதற்கு கீழ்  கண்டவையும் காரணமாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

241015 00Z global wind australia

  1. முற்றிலுமாக தென் மேற்கு பருவக்காற்று விலகிவிட நிலையில், (வட கோளத்தில்) புவியின் நில நடுக்கோட்டை ஒட்டிய வெப்பமண்டல பகுதியில் வடகிழக்கு வாணிப காற்று நிலைக் காற்றாய் வீசும்.
  2. வட கோள வியாபார காற்றும் [வட கிழக்கு] தென் கோள வியாபார காற்றும்[தென் கிழக்கு] சந்திக்கும் பகுதி இரு கோள வெப்ப மண்டல காற்றுக் குவியும் பகுதி எனலாம்.
  3. புவியின் வெப்ப மண்டல பகுதியில் பெற வானிலைத் தாக்கங்கள் ஏற்படும் போது அத்தைக்கு ஏற்ப இப்பகுதியில் வானிலை நிகழ்வுகள் ஏற்படும். அவ்வாறே
  4. புவி வெப்ப மண்டல காற்று குவியும் பகுதியில் தென்கிழக்கு வியாபாரக் காற்றில் ஏற்பட்ட சிறு அத்து மீறலே மழைக்கு காரணமாய் இருந்திருக்கலாம்.

olr total 20to221015

இன்று தென் கிழக்கு காற்று சென்னைக்கு கீழே கடற்கரை பகுதியில் மழை தரலாம்.

இந்திய வானிலை துறை வடகிழக்கு பருவ காற்றின் தொடக்கம் அக்டோபர் 28 அன்று நிகழ கூடும் என எதிர்பார்கிறது.