வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வடகிழக்கு பருவ மழை எப்பொழுது உருவாக கூடும் என எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கும் நிலையில் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் ஓர் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு தற்பொழுது எழுந்துள்ளது.  இது வடகிழக்கு பருவ மழையை துவக்க கூடிய உந்துதல் ஆக இருக்க கூடும்.

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.  இது வடக்கு / வடமேற்கு திசையில் நகர்ந்து இந்திய தீபகற்பத்தை நோக்கி நகரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகும்.  தற்பொழுது உள்ள வளிமண்டல சூழலில் திங்கள் நள்ளிரவு முதல் கடலோர பகுதிகளில் மழை பெய்ய துவங்கும்.

Weather_map

இந்த குறைந்த அழுத்த தாழ்வு பகுதி மேலும் வலு பெறுவது அரபிக்கடல் பகுதியில் உள்ள வேறொரு சலனம் வலு பெறுவதை பொருத்து உள்ளது.