வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி

வங்க கடலில் இலங்கை அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  அடுத்த ஓரிரு நாட்களில் இந்திய வானிலை துறை இது நன்கமைந்த குறைந்த காற்று தாழ்வு பகுதியாக மாற கூடும் என எதிர்பார்கிறது. இதன் காரணமாக வடகிழக்கு பருவ மழை நாளை / நாளை மறு நாள் துவங்க கூடும்.

இந்நிலையில் அரபிக்கடல் பகுதியில் உருவாகி வரும் வேறொரு குறைந்த காற்று அழுத்த பகுதி காரணமாக வங்க கடலில் நிலை கொண்டுள்ள கலக்கம் வலு விழக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

தற்பொழுது நிலவும் சூழலை நாம் ஆராய்ந்தோம் எனில் வடகிழக்கு பருவ மழை துவக்கம் எந்த பாதிப்பும் அடைய வாய்ப்பு இல்லை என்ற போதிலும்  தமிழகத்தில் பெய்யும் மழை அளவு மற்றும் எவ்வளவு பரவலாக மழை பெய்ய கூடும் என்பது அரபிக்கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியை பொறுத்தே உள்ளது.  இது மேலும் வலு பெற்று புயலாக உருவாக கூடும் என வானிலை படிவங்கள் எதிர்பார்த்த போதிலும் தற்பொழுது நிலவ கூடிய நிலையற்ற சூழல் அடுத்த ஓரிரு நாட்களுக்கும் நீடிக்கும் என எதிர்பரக்கலம்.

26_10_1

இந்த இரு கலக்கம் இடையே நடக்கவிருக்கும் ஓர் வானிலை மல்யுத்ததின் முடிவு பொருத்து தமிழகத்தில் மழை அளவு மற்றும் எவ்வளவு நாட்கள் மழை பெய்ய கூடும் என்பதும் மாற கூடும்.