வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க கூடும்

நேற்று இரவு தென் சென்னை புறநகர் பகுதிகள், மகாபலிபுரம் மற்றும் அதனை பகுதிகள் சற்று மிதமான மழை பெய்தது. தையூரில் உள்ள வானிலை வலை பதிவாளர் ரைஜின்வெதர் அவரது தானியங்கி வானிலை மையத்தில் 28 மிமீ மழை பதிவாகியது. இதே போல் கடலூர் மற்றும் திருபோருரில் உள்ள வேளாண் பல்கலைகழக தானியங்கி வானிலை நிலையங்களில் காலை 5:00 மணி வரை முறையே 20 மிமீ மற்றும் 29 மிமீ  மழை பதிவாகி உள்ளது.

இன்று வடகிழக்கு பருவ மழை தொடங்க கூடும் என இந்திய வானிலை துறை எதிர்பார்கிறது.  வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் பலமான கீழை காற்று காரணமாகவும் நேற்று கடலோர பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.  இது இன்றும் தொடர கூடும்.

28_10_1

குறிப்பாக இன்று நாகை மற்றும் அதனை சுற்றி உள்ள டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.  வட தமிழக கடலோர பகுதிகளில் மழை பல இடங்களில் பெய்ய கூடும்.  முன்னிரவு முதல் மழை சற்று பலமாக பெய்ய கூடும்.

சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்க கூடும், காலை நேரம் ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்ய கூடும். கீழை காற்று கொண்டு வரும் மழை மேகம் காரணமாக சில நேரம் மிதமான மழை பெய்ய கூடும். இரவு பொழுதில் சற்று பலமான மழை சில இடங்களில் பெய்ய கூடும்.