வடகிழக்கு பருவ மழை தொடங்கியது

நேற்று இந்திய வானிலை துறை அதிகாரப்பூர்வமாக வடகிழக்கு பருவ மழை தொடங்கியது என அறிவித்துள்ளனர். துவக்க தினம் அன்று சென்னை நகரின் மையப்பகுதியில் மழை பெய்யவில்லை என்ற போதிலும் நகரின் தெற்கு மற்றும் தென்மேற்கு புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.  தாம்பரத்தில் 7 செ.மீ மழையும் செம்பரம்பாக்கம் பகுதியில் 5 செ.மீ மழை அளவும் பதிவாகியது.

இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெறக்கூடும் என இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது.  இது இந்திய கடலோர பகுதிகளுக்கு எந்த ஒரு பதிப்பும் ஏற்படுத்தும் சாத்தியகூறு சற்று குறைவே.ஓமான் அல்லது ஏமன் நாட்டு பகுதிகளில் இது கரையை கடக்க கூடும்.

இலங்கை அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி அதிகம் நகராமல் நிலை கொண்டுள்ளது, இது தமிழகத்தை நோக்கி வர கூடும் என எதிர்பார்த்த நிலையில், அதிகம் நகராமல் இருப்பதால் தமிழகத்தில் பரவலான மழை பெய்யும் வாய்ப்பு எதிர்பார்த்த நிலையை இன்னும் எட்ட வில்லை.

வரும் ஓரிரு நாட்களில் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் மழை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

29_10

 

இன்று தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் ஓரளவு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும்.  வட தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும்.