சென்னையில் பகல் நேர வெப்ப நிலை உயர வாய்ப்பு

மே4 அன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் சென்னையை பொருத்த வரை சற்றே மிதமாகவே இன்று வரை உள்ளது. கடந்த சில தினங்களாக உயர்ந்த பட்ச வெப்ப நிலை 35⁰ டிகிரி அளவே இருந்தது.

இந்நிலையில் அடுத்த ஓரிரு தினங்களில் சென்னையின் பகல் நேர வெப்ப நிலை 36⁰ / 37⁰ டிகிரி வரை தொட கூடும்.

இலங்கை அருகே உள்ள மேலடுக்கு காற்று அழுத்த சுயற்சி காரணமாக நாகை ஒட்டிய டெல்டா பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் மழை பெய்ய கூடும். நாளை மாலை தர்மபுரி ஒட்டிய பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய கூடும்.

Weather_map